இலங்கையில் ஐந்து பாரிய மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரிகளை செலுத்தத் தவறியுள்ளதாக கலால் திணைக்கள வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே இவ்வாறு செலுத்தப்படாத பெரும் தொகையான வரிகளை மீளப்பெறுவதற்கு, கலால் திணைக்களம் உடனடி சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஜந்து நிறுவனங்களும் செலுத்த வேண்டிய முழுத்தொகையில் செலுத்தப்படாத வரியில் 30 வீதம் காணப்படுவதாகவும் மேலும் 60 வீதம் தாமதக் கட்டணம் என்றும் கலால் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.