அடுத்தவார இறுதியில் வீடுகளில் தங்குமாறு கொழும்பு மக்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள்.! samugammedia

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் எதிர்வரும் வார இறுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதகவும் எனவே, மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து 

அதற்கு ஆதரவளிக்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சரும் டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவருமான வைத்தியர் சீதா அரம்பேபொல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு லார்வா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகளை டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகும் இடங்கள் என குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி மேல்மாகாணத்தில் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனவரி மாதம் முதல் இதுவரை 47 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 50வீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் வார இறுதியில் ஆயுதப்படையினரின் ஆதரவுடன் கொழும்பு நகரில் விசேட தூய்மை வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 

அதே நேரம், மாகாண சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஏனைய அனைத்து மாகாணங்களிலும் குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *