அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டத்தில் தகுதி இருந்தும் புறக்கணிப்பு..! மூதூரில் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!samugammedia

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டத்தில் தகுதி இருந்தும் தெரிவு செய்யப்படாது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெளியிலிருந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் பிரதேச செயலக கதவினை திறந்து பிரதேச செயலக வளாகத்தில் நுழைந்து அங்கும் சத்தமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.விதவைகளாக இருக்கின்றோம்.அன்றாட கூலி வேலை செய்து சாப்பாடுவதற்கு கூட கஷ்டப்பட்டு வாழ்கின்றோம்.தற்போது மின்சார கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கஷ்டப்படும் நமக்கு அரசாங்கமும், அதிகாரிகளும் தீங்கிழைத்துள்ளனர் என ஆவேசத்துடனும் ,கவலையுடனும் கருத்து தெரிவித்தனர்.

அத்தோடு தகுதியானவர்களின் பெயர்கள் உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.தகுதியற்றவர்களின் பெயர்களே இடம்பெற்றுள்ளன.

சமூர்த்தி வங்கியில் உள்ள பொதுமக்களின் பணம் சூரையாடப்பட்டு உழல் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவித்தனர்.

சுமார் அரை மணி நேரம் பிரதேச செயலக வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாறக் அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சந்தித்து பேசியனர்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை மீள் பரிசோதனை செய்வதாகவும், அதற்காக உத்தியோகத்தர்களை நியமித்து நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *