காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் முதல் பெண் அதிபராக கெளரியாம்பாள் அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நியமனம் 05.07.2023 அன்று நடமுறைக்கு வரவுள்ளதாக கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது. காரைநகர் வாரிவளவினைச் பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ரன் கல்லூரி மற்றும் யாழ் வேம்படி மகளீர் கல்லூரி பழைய மாணவியுமாவார்.
யாழ்றரன் கல்லூரியின் பழைய மாணவியாகிய இவர் முன்னாள் கணித ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இனிவரும் காலங்களில் கல்லூரியின் கற்றல் பெளதீக வள செயற்பாடுகள் மேலும் முன்னேற்றமடைந்து கல்லூரியும் புகழ் பலர் நா (க்களில்) ஊசலாடும் என்பதில் எவ்வித ஜயமுமில்லைஎன பாடசாலை சமூகத்தினர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்,