எதிர்வரும் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் விநியோகம் பூர்த்திசெய்யப்படும் – வியாழேந்திரன் தெரிவிப்பு! samugammedia

எதிர்வரும் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் விநியோகம் பூர்த்திசெய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக குடிநீர் தேவையினை கோரிக்கையினை விடுத்துக்கொண்டிருந்த மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு இதுவரை கிடைக்கப்பெறாத பகுதிகளுக்கானசுமார் 2 கிலோமீட்டர் நீள குடிநீர் வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பகுதிகளில் 48கிலோமீற்றர் பகுதிகளுக்கு குடிநீர்வ ழங்கவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் மயிலம்பாவெளி காமாட்சி கிராமம் மற்றும் மைலம்;பாவெளி பகுதி மக்களின் நன்மை கருதி குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நீர்வழங்கல் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவகர், கட்சியின் இணைப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அப்பகுதி மக்களுடன் அவர்களது பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் அவர்களது கோரிக்கை கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில்

நமது மாவட்டத்தில் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி இருக்கின்ற எதிர்நோக்குகின்ற  பிரச்சனைகளில் குடிநீர் பிரச்சினையும் ஒன்று சுத்தமான குடிநீரை வழங்குகின்ற இச்செயற்றிட்டம் இப்பொழுது மாவட்டத்திலே குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களுக்கு இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த வருடம் அல்லது வருகின்ற வருடத்திற்குள் மாவட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கின்ற 55மூ பகுதிகளில்  குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும்.

திராய்மடு தொடக்கம் புன்னைகுடா வரையிலான பதிகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான செயல்திட்டத்தை ஆரம்பித்து அதற்கான விலை மனு கூறல் அழைப்பின் போது பொருளாதார பிரச்சனை போன்ற பல காரணங்களினால் பின் போடப்பட்டிருந்தது.

நமது மாவட்ட நீர்ப்பாசன முகாமையாளர் இத்திட்டத்தினை அமைச்சு மட்டத்தில் பேசி விரைவாக கொண்டு வர வேண்டும் என கூறியதற்கு அமைவாக அமைச்சராக இருக்கின்ற ஜீவன் தொண்டமான் அவர்களோடு இத்திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என நான் கூறிய போது தங்களுக்கு அவர்கள் இந்த வேலை திட்டத்தினை விரைவாக ஆரம்பிப்பதற்கு உதவி புரிந்திருக்கின்றார்.  ஆகவே இந்த இடத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

மாவட்டத்திலேயே குடிநீர் இணைப்புகள் இல்லாத இடங்களுக்கான நான் முன் வைத்திருக்கின்றேன் எதிர்வரும் நாட்களிலே நாங்கள் அந்த குடிநீர் இணைப்புகளை வழங்குவோம் இந்த வருடத்திலேயே வேகமாக செய்ய முடியும் ஆனால் நாட்டின் பொருளாதார பிரச்சினை உங்களுக்குத் தெரியும் அமைச்சுகளுக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் இல்லை.

என்னுடைய அமைச்சை எடுத்துக்கொண்டால் நிதி ஒதுக்கீடு ஐந்து வீதமும் இல்லை ஏனெனில் நாட்டின் பொருளாதார பிரச்சினை காரணமாக நிவாரண சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றது இருப்பினும் இருக்கின்ற வளங்களை வைத்துக் கொண்டுதான் நாங்கள் இப்பொழுது வேலை செய்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே உன்னிச்சை குளத்திலிருந்து எடுக்கப்படுகின்ற தண்ணீர்தான் எங்களுக்கு தற்பொழுது வருகின்றது குளத்திலிருந்து ஒரு நாளைக்கு 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகின்றது இவை வவுனதீவில் சுத்திகரிக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றது.

இந்த 4 கோடி லீட்டர் தண்ணீரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 3 கோடியே 20 லட்சம் லீட்டர் தேவைப்படுகின்றது இவற்றில் பார்க்கும் பொழுது 45 வீதமான இடங்களுக்குதான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது இன்னமும் 55 வீதமான இடங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.

எங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் காணப்படுகின்றது ஒன்று மக்கள் குடிநீர் இணைப்பினை கேட்கின்றார்கள் மற்றுமொன்று வரப் போகின்றது அடுத்த கட்டமாக உன்னிச்சை லிருந்து எடுக்கப்படுகின்ற தண்ணீரின் அளவு மிகுதியாக உள்ள 55 விதமான இடங்களுக்கு இணைப்பினை வழங்கினால் போதாது.

இவற்றினை கருத்தில் கொண்டு நாங்கள் தற்பொழுது மிகப் பெரிய ஒரு செயற் திட்டத்தினை முன் வைத்திருக்கின்றோம் உறுகம், கித்துல் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இல்லாவிடில் காரிய பிரச்சனைக்கு நாங்கள் எதிர் நோக்க வேண்டி நேரிடும்.

உறுகம் கித்துல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை ஆரம்பிப்பதாயின் பல கோடி ரூபாக்கள் தேவை. அதனை ஆரம்பித்தால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த குடிநீர் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.

இதேபோன்று மின்சாரத்தை எடுத்துக் கொண்டால் தற்போது மின் பட்டியலினை கட்ட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது ஏனெனில் பட்டியல் அதிகரித்துள்ளது ஒருவரின் மாத சம்பளத்திற்கு ஏற்ற அளவிற்கு மின் பட்டியல் வருகின்றது இந்த நிலையில் அந்த குடும்பம் எவ்வாறு வாழ்வது.

மின்சார பிரச்சினையை தீர்க்க வேண்டும் ஆயின் சூரிய மின் உற்பத்தியினை கொண்டு வந்து நாங்கள் மின்னை உற்பத்தி செய்ய வேண்டும்.

தற்போது தென்கொரியாவில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒரு திட்டம் வந்திருக்கின்றது 1200 மில்லியன் அமெரிக்க டொலர்.இந்த செயல் திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பான விடயங்களை இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த காணி தொடர்பான கருத்துக்கள் மக்களுடைய வாழ்வாதார காணிகளும் இருப்பதனால் பாதிப்பில்லாத வகையில் ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற விடயம் பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு துறைகள் சார்ந்து மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது விவசாயம், மீன்பிடி, மின்சாரம், குடிநீர் இணைப்பு, வாழ்வாதாரம், வீடமைப்பு சமூர்த்தி.

தற்பொழுது சமூர்த்தி பிரச்சினை நித்திரை கொள்ள முடியவில்லை ஏனெனில் மக்கள் பாவம் இந்தத் திட்டத்தினால் உண்மையாக பாதிக்கப்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற ஏழை மக்கள் விடுபட்டு இருக்கின்றது.

யாசகம் பெரும் ஒரு ஐயாவிற்கு மாத வருமானமாக 55,000 போட்டு காட்டப்பட்டிருக்கின்றது இவருக்கு இவ்வாறான வருமானம் வரும் எனில் ஏன் அவர் யாசகம் பெற வேண்டும் பிழையான சில தகவல்கள் காட்டப்பட்டுள்ளது.

சிலரைப் பார்த்தால் மாற்றுத்திறனாளிகள், விதவைத் தாய்மார்கள் இவர்களுடைய சமுர்த்தி இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற அநேகமான அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் இந்த விடயம் தொடர்பாக தற்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம் நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் சில முக்கிய கூட்டங்கள் இடம் பெற இருக்கின்றது இது தற்பொழுது ஒரு பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது.

உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் நாங்கள் இதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் 100மூ உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் எங்களுக்கு இடம் இல்லை.

நான் முடிந்த அளவு சில பிரதேச செயலாளர்களிடம் கூறி இருக்கின்றேன் இந்த திட்டங்களை உடனடியாக நாங்கள் நிறுத்த வேண்டும் நிறுத்தி இது இதனை மீள் பரிசீலனை செய்து உண்மையாக உள்வாங்கப்பட வேண்டிய மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

சில நபர்கள் உள்ளனர் பெரிய வீடு அவர்கள் ஆஸ்திரேலியாவில், கனடாவில் உள்ளனர் அவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டிருக்கின்றது இது என்ன வகையான நிகழ்வு என எனக்கு தெரியவில்லை இது எங்கு பிரச்சனை உள்ளது என்பது தெரியவில்லை இது சரியான முறையில் ஆரம்பிக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சமூர்த்தி வழங்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *