ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் காலமானார்! samugammedia

வவுனியாவின் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் இன்று (28.06.2023) சுகவீனம் காரணமாக காலமானார்.

முன்னாள் வவுனியா மாவட்ட சபை தலைவராகவும் பொது அமைப்புக்களின் தலைவராகவும் பதவி வகித்த அன்னார் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தில் நீண்டகாலமாக தலைவராக இருந்து வவுனியா மாவட்டத்திற்கு பல்வேறு உதவிகளை புரிந்தவர். 

பண்டாரவன்னியனின் சிலையை வவுனியா நகரில் நிறுவுவதற்கு அன்றைய வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்துடன் இணைந்து செயற்பட்ட இவர் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வவுனியா மண்ணில் இருந்து சட்டத்துறையில் சிறப்பாக செயற்பட்டவராவார். 

பல இளம் சட்டத்தரணிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் வழிகாட்டியாக இருந்த மு. சிற்றம்பலம் அவர்கள் 80ஆவது வயதில் காலமானார்.

அன்னார் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மு. சிவசிதம்பரம் மற்றும் வவுனியாவின் பிரபல ஆசிரியர் மு. கத்தப்புவின் சகோதரராவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *