ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று(29) காலை முந்தலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிக்கியதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தின் பின்னர் அவர் ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், தற்போது ஹலவதா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

