யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் இணைய விளம்பரத்தை நம்பி பணத்தினை இழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.
ஏமாந்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு
அதில் அந்த மோட்டார் சைக்கிள் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை அடுத்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த தொடர்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளார் யாழ் இளைஞர்.
அதன்போது, மோட்டார் சைக்கிளுக்கு உரிய முழு தொகையையும் வங்கி ஊடாக செலுத்தினால், மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கையளிக்கிறோம் என நம்பிக்கை தரும் விதமாக மறுபுறத்தில் இருந்தவர் கூறியுள்ளார்.
அதனை நம்பிய யாழ் இளைஞன் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் தொலைபேசி இலக்கம் செயல் இழந்துள்ளது.
அதனையடுத்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த கொழும்பு விலாசத்தை தேடி சென்ற போது, விலாசம் பொய்யானது என தெரிய வந்துள்ளது.
அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார். இதுபோன்ற விளப்ரங்களை நம்பி குறைந்தவிலையில் பொருகள் வாங்கலாம் என நினைப்பவர்கள் பெரும்தொகை பணத்தை இழக்க நேரிடலாம்.
எனவே இணைய விளம்பரங்களை நம்பி யாழ் இளைஞர் போல் ஏமாந்து விடாதீர்கள்.
The post இணைய விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ் இளைஞன் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
