மாநாட்டுக்கு வராத வடக்கு ஆளுநர் – தேசியக் கொடி ஏற்றாது காத்திருப்பு! samugammedia

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மாநாடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.

யாழ். நல்லூரில் ஆரம்பமான மாநாட்டுக்கான பேரணி யாழ். வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்த நிலையில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட வட மாகாண ஆளுநர் வராதமையால் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களும் மக்களும் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் வருவாரா வரமாட்டாரா என தகவல் வழங்கப்படாத நிலையில் ஏற்பாட்டாளர்கள் அங்கும் இங்குமாக திரிந்தனர்

இறுதியில் ஆளுநர் வருகை தராத சூழ்நிலையில் இலங்கை தேசிய கொடியினை யாழ். மாநகர ஆணையாளர் ஜெசீலன் ஏற்றினர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *