விமானப் பணிப்பெண்களாக கடமையாற்ற இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்..! வெளியான அறிவிப்பு samugammedia

கட்டார் விமான சேவையில் விமானப் பணிப்பெண்களாக இணைந்து கொள்ள இலங்கையர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமானச் சேவையில் பணிப்பெண்களாக பணிப்புரிவதற்கான தகுதியை கொண்டவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான குறைந்த பட்ச வயதெல்லை 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் புலமைத்துவம் கொண்டிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமுடையவராகவும் இருத்தல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தியெய்தவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *