மட்டக்களப்பில் குளப் பகுதியில் மண் அகழ்ந்து அதனை கழுவி ஏற்றுமதிக்கு பயன்படும் நிலையம் அமைக்க நடவடிக்கை! samugammedia

மட்டக்களப்பு புணானை குளப் பகுதியில் மண் அகழ்ந்து அதனை கழுவி ஏற்றுமதிக்கு பயன்படும் நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு விவசாயிகளின் ஆட்சேபனையினை அடுத்து நீர்பாசன பொறியியலாளர் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

புணானை குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் காணப்படும் மண் அகழப்பட்டு அவை கழுவி வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அமைச்சின் சிபார்சு  ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வேண்டி நீர்பாசன தினைக்களம்,மற்றும் வன இலகா திணைக்களம் போன்றவற்றின் அனுமதியினை நாடியிருந்தார்.

இதன் பொருட்டு குறித்த குளப் பகுதிக்கு இன்று காலை (30) அதிகாரிகள் சகிதம் நேரடியாக சென்ற செங்கலடி உறுகாமம் பிரதேச பொறியிலாளர் ந.விஷ்னுரூபன் நிலமைகளை அவதானித்தார்.இதன்போது அங்கு கூடிய விவசாய கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் குளம் மற்றும் பிற பகுதிகளில் மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுமானால் அதனால் ஏற்பாடும் பாதிப்பு தொடர்பாகவும் குறித்த இடம் பொருத்தமற்றது என்றும் விவசாயிகளினால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

விடயங்களை கேட்டறிந்து கொண்ட பொறியியலாளர் விண்ணப்பம் செய்தவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப குறித்த பிரதேசம் வனம் நிறைந்த இடமாகவும்,மின்சார கம்பங்கள்,புகயிரத பாதை காணப்படுவது அகழ்வு பணிக்கு பொருத்தமற்றதாகும் என்பதுடன் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதனால் மாவட்ட அபிவிருத்தி குழுவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பாடதா வகையில் மண் அகழ்விற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஏற்ப அனுமதி வழங்க முடியாதுள்ளதாகவும் இது குறித்து தமது மேலதிகாரிக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

விடயத்தை கேட்டறிந்து கொண்ட விண்ணப்பதாரர் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தாம் செயறற்படபோவதில்லை என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தமது  விண்ணப்பத்தினை மீளப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் 430 குளங்கள் வரை காணப்படுவதாகவும் அதில் சுமார் 230 வரையிலான குளங்கள் புணர்தாரணம் செய்யப்படாமல் உள்ளதால் அவை போன்ற குளங்களை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்வதனால் குளத்தில் நீர் நிரம்பி காணப்படுவதுடன் விவசாயத்திற்கும் நன்மை பயக்கும் என தெரிவித்தனர்.

மண் நிரம்பி புணர்தாரணம் செய்யப்படாமல் காணப்படும் நீர்பாசன குளங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் குளத்தில் அருகில் தேங்கி கிடக்கும் மண்ணை அகற்றும் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சரினால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இதில் குழப்ப நிலைமையும் மாவட்டத்தில் நிலவி வருகின்றது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *