2988 ஏக்கர் காணிகள் படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது என வலி வடக்கு பிரதேச செயளாளர் சிவஹீ தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ம் ஆண்டிலிருந்து 2023 ம் ஆண்டு வரை 39881 குடும்பங்களைச் சேர்ந்த 127011 பேர் உள்ளக ரீதியாகவும் மீள்குடியேற்றப்பட்டதுடன் 1594 குடும்பங்களைச் சேர்ந்த 4419 பேர் மொத்தமாக 40865 குடும்பங்களைச் சேர்ந்த 131825 பேர் இதுவரை மீளக்குடியமர்ந்துள்ளனர்.
இதேவேளை 2311 குடும்பங்களைச் சேர்ந்த 6902 பேர் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலுமுள்ள மீளக்குடியமர வேண்டியவர்களாக உள்ளனர்.
136 குடும்பங்களைச் சேர்ந்த 6437 பேர் தற்பொழுது நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றனர்.
2009 ம் ஆண்டளவில் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளாக 23850 ஏக்கர் காணி காணப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக 20715 ஏக்கர் காணிகள் யாழ் மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதிலே 2023 ம் ஆண்டு மாசி.மாதம் 3 ம் திகதி 106 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.
மொத்தமாக 2988 ஏக்கர் காணிகள் பாதுகாப்புப் படையினரிடமிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதிலே இராணுவத்தால் 2303 ஏக்கரும் கடற்படையால் 195 ஏக்கரும் விமானப்படையால் 640 ஏக்கரும் பொலிசாரால் 52 ஏக்கரும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதியின் பதவி் காலத்தில் 2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் 3402 ஏக்கர் காணிகள் மொத்தமாக விடுவிக்கப்பட்டது.
தனது பதவிக் காலத்தில் இரு தடவைகள் நேரடியாக வருகை தந்ததுடன் மயிலிட்டித் துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன் முகாம்களில் வசித்த குடும்பங்களிற்காக ஒரு குடும்பத்திற்கு அரச நிதியில் இரண்டு பரப்பு வீதம் கொள்வனவு செய்து கொடுக்க வழி.செய்தாரெனவும் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்தில் காடாகக் காணப்பட்ட இப் பிரதேசம் அரசின் பாரியளவு நிதிப் பங்களிப்புடன் மக்கள் குடியேறுவதற்குரிய முறையில் மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு இடமபெறுகின்றது. அதில் முதற்கட்டமாக 1950 ஆண்டளவில் 343 ஏக்கர் காணி.சுவீகரிக்கப்பட்டது. தற்பொழுது 646 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டநிலையில் விசாரணையின் கீழ் 405 காணிஉரிமைாளர்களை இதுவரை பதிவு செய்துள்ளோம்.
2858 ஏக்கரில் விமானப்படையிடமுள்ள 1008 ஏக்கரைத் தவிர ஏனையவை இராணுவம் மற்றும் கடற்படை வசமுள்ளது.
தற்பொழுது 3 ஆலயங்கள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் பாடசாலைகளையும் விடுவிக்குமாறு உரிய தரப்புக்கு கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளோம்
மக்கள் தங்களுடைய காணிகளை தமக்கு வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுப்பதுடன் 2000 க்கு மேற்பட்ட மக்கள் தற்பொழுதும் நலன்புரி நிலையங்களில் வசித்து வருகின்றதனர் எனச் சுட்டிக்காட்டினார்.