எமது பூர்வீக மண்ணில் குடியேறி விவசாயம் மேற்கொண்டு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டிய தேவையுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் மக்களைச் சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பினும் சந்திக்கின்ற காரணம் கவலை தரும் விடயம். எமது பிரதேசங்களுக்குச் செல்வதற்குள் எவளவு முயற்சிகளை எடுத்தும் முழுமையாக இவ் விடயம் கைகூடவில்லை.
இக் காணிகள் விடுவிக்கப்படாது எனக் கூறிய கால கட்டத்தில் உங்களுடைய வாக்குகளால் ஜனாதிபதியாகி 90% காணிகளை விடுவித்தார்.
எமது மக்கள் எமது பூர்வீக மண்ணில் குடியேறி விவசாயம் மேற்கொண்டு வாழ்க்கையை கொண்டுநடத்த வேண்டிய தேவையுள்ளது. எனவே இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சிற்கும் அழுத்தமாக எடுத்துக்கூற வேண்டும்.
ஹீலங்கா சுதந்திரக்கட்சி மறு சீரமைப்பை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல தரப்பை முன்னாள் ஜனாதிபதி சந்தித்துக் கொண்டிருக்கின்றார்.
ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் ஏராளமான காணிகளை விடுவித்திருந்தாலும் ஏனைய காணிகளை விடுவி்க்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
மக்கள் குடியேற வேண்டிய காணிகளில் இராணுவம் விவசாயம் மேற்கொள்கின்றது.
விமானப் படைக்கென்று கூறிஏராளமான காணிகள் பயன்படுத்தப்படாதுள்ளது.
.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் நடாத்தப்பட்ட சர்வ கட்சி மாநாட்டிலும் எனது ஆட்சிக் காலத்தில் 90% காணிகள் விடப்பட்டிரு்கும் நிலையி் ஏனைய காணிகள் ஏன் இதுவரை விடுவிக்கப்படவி்ல்லையென கேள்வி எழுப்பினார். இக் காணி.விடுவிப்பிற்கு கட்சி ரீதியான பங்களிப்பை வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதேவேளை எனது காணியும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவி்கப்பட்டது என்ற வகையில் அந்த வேதனையை முழுமையாக நான் அறிந்தவன். என்றார்.