இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு இந்த பதவி இல்லாமல் போனால் வெளிநாடு சென்று அவரால் வாழமுடியும் ஆனால் வியர்வை சிந்தி உழைக்கின்ற பணத்திற்கு வட்டி வீதம் குறைந்தால் பாதிக்கப்படுவது நாட்டு மக்களே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
முறிகள் சந்தையிலேயே 99 சதவீதமான ஊழியர்களின் சேம இலாப நிதி முதலீடு செய்யப்படுகிறது.
இதன் போது அவர்களிற்கு வீதம் வட்டி கிடைக்கும்.
அவர்கள் இலாபம் மற்றும் நிர்வாகம் செலவுகளை வைத்து பார்த்த போது, முதலீடு செய்த ஊழியரிற்கு 9 வீதம் கிடைக்காது மேலும் குறைந்து விடும்.
ஒரு ஜன ரஞ்சக எதிர்க்கட்சியாக இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.
இதனால் சாதாரண ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகள் அல்லவா இது.
அவ்வாறாயின் எங்களின் கைகளை உயர்த்த முடியுமா.?
எங்களுடைய கட்சியின் பொருளாதார முறையை நிர்வகித்து வரும் ஹர்ச டி சில்வாவே இதனை தெரிவித்தார்.
மத்திய வங்கி ஆளுநரிற்கு இந்த தொழில் இல்லாவிடில் நாடு வீழ்ச்சி அடைந்தாலும் வெளி நாட்டுக்கு சென்று வாழ முடியும் .
உங்களிற்கு அவ்வாறு ஏலுமா..??
நீங்கள் வேலை செய்து வியர்வை சிந்தி உழைத்த பணத்திற்கு வட்டி வீதம் குறைந்தால் பாதிப்பு நாட்டு மக்களிற்கே.