வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் புதிய நிர்வாகம் தெரிவு! samugammedia

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் 26.07.2023 மாலை ஆறு மணியளவில் Tilko city hotel இல் நடைபெற்றது.

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் என்பது வடமாகாணத்தில் உள்ள சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையோடு தொடர்புபட்ட ஏனைய அமைப்புக்களையும் இணைத்து செயற்படுகின்ற ஒரு பொது அமைப்பாகும்.  

யாழ்ப்பாணம் யாழ்பாடியின் உரிமையாளர் திரு சுந்தரேசனால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்றது. பெரும்பாலும் உல்லாச விடுதி உரிமையாளர்களை அங்கத்தவர்களாக கொண்டு இயங்கி வருகின்றது. 

இதன் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று இடம் பெற்றது இதன் புதிய தலைவராக கொசி கொட்டல் உரிமையாளர் திரு சு.சுதர்சன் தலைவராகவும் my pizza உரிமையாளர் திரு கார்த்திக் செயலாளராகவும் தெரிவு செய்யப்ப்டுள்ளனர்.  

புதிய நிர்வாகம் தாம் ஆற்றப்போகின்ற பணிகள் தொடர்பான விடயங்களை செயற்றிட்ட அறிக்கையாக சமர்ப்பித்திருந்தனர். வடமாகாண சுற்றுலாத்துறையினை வளமான சுற்றுலாத்துறையாக மேம்படுத்துவதுடன் புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்வதும் இவர்களது பிரதான பணியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *