வெளிநாட்டு பல் தேசிய கம்பனிகளின் தேவைக்காக சூறையாடப்படும் வடக்கின் வளமான கடல் வளம்! samugammedia

வடக்கின் வளமான கடற் பகுதி வெளிநாட்டு பல்தேசிய கம்பனிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தேவைக்காக சூறையாடப்படுவதாக அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் டினேஸ் சுரோஞ்ச பெர்ணன்டோ தெரிவித்தார்.

யாழில் வட மாகாண மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்களை சந்தித்த பின் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடபகுதி மீனவ மக்கள் 30 வருட யுத்தத்தின் பின்னர் தமது அன்றாட வாழ்க்கையினை கட்டி எழுப்புவதற்கு முடியாதவர்களாக காணப்படுகிறார்கள்.

மீனவ மக்களின் பிரச்சினைகளை ஒன்றிணைப்பதற்காக நாம் வடபகுதி மீனவ அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினோம்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் ஆகிய மீனவ சங்கங்கள் சமாசங்களுடன் இணைந்து  அவர்களின் தீர்கப்படாத பிரச்சினைகளை தென் இலங்கையை நோக்கி நகர்த்துவதற்கும் தீர்வுகளை பெறுவதற்கான முயற்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்குமாக குறித்த சந்திப்பு இடம் பெற்றது.

வடக்கு கடலில் அட்டை பண்ணுகின்ற போர்வையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை கடலில் எக்ஸ்பிரஸ் போள் கப்பல் அனர்த்தத்தினால் கடல் வளங்கள் அழிக்கப்பட்டதுடன் கடற் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

குறித்த அனர்த்தத்தில் வட பகுதி  கடலில் ஆமைகள் இறந்தவுடன் மீன் இனங்களும் இறந்து கரை ஒதுங்கின.

எனினும் அனத்தத்தில் பாதிக்கப்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு குறைந்த இழப்பீடு  வழங்கப்பட்ட நிலையில் வடக்கு மீனவர்களுக்கு எந்த ஒரு இழப்பீட்டையும் அரசாங்கம் வழங்கவில்லை.

குறித்த கப்பலினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் குறைவதற்கு இன்னும் 10 வருடங்கள் செல்லும் என ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் எமது மீனவ மக்க

வடக்கில் அட்டை பண்ணை என்ற போர்வையில் வெளிநாட்டு பல்தேசிய கம்பெனிகளுக்கும் அரசியல்வாதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக கடல் சூறையாடப்படுகிறது.

இதன் காரணமாக பாரம்பரியமாக கட்டிக் காத்து வந்த தொழில்முறை மாற்றப்பட்டு மீனவ சமுதாயம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத துப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மரத்துக்கு பசளையாக பாவிக்கப்படும் கரட்டை மீன் இன்று ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்படுவதுடன் கருவாடும் போடுகிறார்கள் .

இந்த நிலைமைக்கு வருவதற்கு யார் தான் காரணம் எனத் தேடிப் பார்த்தால் எமது கடல் வளத்தை அளித்தவர்களே பொறுப்பு கூற வேண்டும்.

ஆகவே தான் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் எமது தொழிற்சங்கம் வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  எமது பிரச்சினையாக எண்ணி ஒன்றிணைந்து குரல் கொடுக்க தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *