தங்காலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகொன்று கடலலையில் சிக்கி நீரில் மூழ்கியதால், கடலுக்குள் விழுந்த தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் ஐந்து மணிநேரத்துக்கு அதிகமான காலம் கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற நீண்டநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்களினால் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
தங்காலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 29 ஆம் திகதி வெளியேறியுள்ள இந்த படகு, 30 ஆம் திகதி இரவு 02 மணியளவில் கடலலையில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளது.
காப்பற்றப்பட்ட மீனவர்கள் இருவரும் அன்றைய தினமே தங்காலை மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்தவரப்பட்டுள்ளனர்.
படகு மூழ்கியதன் பின்னர் ஐந்து மணிநேரத்து மேல் மீனவர்கள் இருவரும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனா்.