யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்?

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கைகள் இம்மாதம் நிறைவடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்று கலந்துரையாடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது உள்ள பொருளாதார நிலைமையினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மாணி பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏக மனதாக தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *