திருகோணமலையில் பலத்த சூறாவளிக் காற்று – தூக்கி வீசப்பட்ட வீடுகளின் கூரைகள் samugammedia

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் இன்று மாலை சூறாவளிக் காற்று பலமாக வீசியதில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் தோப்பூர் பகுதியில் பயன்தரும் தென்னை, வாழைமரம், வேப்பை மரம் உள்ளிட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

அத்தோடு சில வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. கராஜ் ஒன்றின் மீது தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் கராஜின் கூரை உள்ளிட்ட உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மற்றுமொரு வீடொன்றின் பாதுகாப்பு சுவரொன்று இடிந்து வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *