புதன் கிழமைகளில் மக்களுக்காக நான்..!எவ்வித தயக்கமும் இன்றி வரலாம்..! வடக்கு ஆளுநர் அறிவிப்பு..!samugammedia

வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் தன்னை சந்திக்க முடியும் என்றும், அதற்கு எவ் விதமான முற்கூட்டிய நேர ஒதுக்குகைகளும் மேற்கொள்ள தேவையில்லை என்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வாராந்தம் புதன்கிழமைகள் மக்கள் சந்திப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தன்னை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதற்காக முற்கூட்டியே எவ்விதமான பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், பொதுமக்கள் எந்த விதமான தயக்கமும் இன்றி தன்னுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச முடியும் என்றும் ஆளுநர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *