கொக்கிளாயில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு கொக்கொளாய் பகுதியில், கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி T. பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்றது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள்,பொலிஸார்,விசேட அதிரடிபடையினர்,சோகோ பொலிஸார்,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் குறித்த அகழ்வுப்  பணிகளைப்  பார்வையிடுவதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சட்டத்தரணி சுமந்திரன், முன்னால் மாகண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் அங்கு  பிரசன்னமாகியிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *