யாழின் முக்கிய ஆலயத்தின் கிடாய் வெட்டு ரத்து..! தர்மகர்த்தா சபையினர் அறிவிப்பு..!samugammedia

பொன்னாலை காட்டு வைரவர் ஆலயத்தில் கிடாய் வெட்டும் வேள்வி இந்த வருடம் நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த ஆலயத்தின் தர்மகர்த்தா சபையினர் அறிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய கும்பாவிஷேகத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை காட்டு வைரவர் ஆலய கடாய் வெட்டு வேள்வியை  எதிர்வரும்  சனிக்கிழமை நடத்துவதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய மகா கும்பாவிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதால் கடாய் வெட்டும் வழிபாட்டை நிறுத்துமாறு பொதுமக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வருடம் கடாய் வெட்டு நிகழ்வு நிறுத்தப்படுவதாக தர்மகர்த்தா சபையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *