யாழில் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களது 10 பவுண் தங்க நகைகள் மாயம்..!samugammedia

வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சிலரது தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 பவுண் தங்க நகை இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அதனை யாராவது கண்டெடுத்தால் ஆலய நிர்வாகத்திடம் வழங்குமாறும் ஆலயத்தில் அறிவிக்கப்பட்டது.
யாழில் உள்ள பிரபலமான ஆலயங்களின் திருவிழாக்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் தங்க நகைகள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *