சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் யாழில் முக்கிய கலந்துரையாடல்..!samugammedia

மக்கள் சிந்தனை மையத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இக்கலந்துரையாடலில்   திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்,   வேலன் சுவாமிகள்,  யாழ் பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர், போராசியர்  கே.ரி கணேசலிங்கம், போராசிரியர் குணபாலன்  மற்றும் வடமாகாணத்தில் உள்ள  அரசியல் அல்லாதவர்கள் கலந்துகொண்டனர்

வடக்கு மாகாண கலந்துரையாடல் இன்றையதினம் காலை 9.00 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்று வருகின்றது.

அதேசமயம், கிழக்கு மாகாண கலந்துரையாடல் நாளையதினம் (09.07.2023) காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *