புத்தளம் நவகத்தேகம பிரதேசத்தின் குறுக்கெட்டியாவ பகுதியில் யானைக் குட்டியொன்று சுகயீனமுற்ற நிலையில் வீழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த அக்கிராம வாசிகள் உடனடியாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைகக்ள அதிகாரிகளுக்குத் தகவலை வழஙகியுள்ளனர்.
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று யானைக் குட்டியைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன் போது யானைக் குட்டிக்கு சிகிச்சையளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நிக்காவரெட்டிய மிருகை வைத்தியரை வரவழைத்தனர்.
குறித்த பகுதிக்கு மிருக வைத்தியர் வருகைத் தந்து யானைக் குட்டியை பார்வையிட்டபோது உணவு சமிபாடடையாமல் சுகையீனமுற்றுள்ளதாகவும் இதனால் யானைக் குட்டி மெலிந்த நிலையில் காணப்பட்டதாக டொக்டர் இசுரு தெரிவித்தார்.

இதன் போது யானைக் குட்டிக்கு பல இடங்களில் சிறிய சிறிய காயங்கள் காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்ததாக வைத்தியர் தெரிவித்தார்.
இதனையடுத்து சுகையீனமுற்ற யானைக் குட்டிக்கு டொக்டர் இசுருவினால் சிகிச்சையளிக்கப்பட்டதுடன், யானைக் குட்டிக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட உள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு சுகையீனமுற்ற யானை சுமார் 4 அடி உயரம் எனவும் 3 அரை வயதுயென மதிக்கப்பட்டுள்ளதாகவும் நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

