புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க அரசு மாற்று காணி வழங்க வேண்டும்- சபையில் இம்ரான் எம்.பி. வேண்டுகோள்! samugammedia

புதிய இடத்தில் மஹர பள்ளிவாசலை அமைக்க  மாற்று காணி வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று (08) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

மஹர சிறைச்­சாலை வளாகத்தில் இருந்த பள்ளிவாசல், சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்ளது.

நூற்­றாண்டு கால வர­லாறு கொண்­டுள்ள மஹர சிறைச்­சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்­மா­ணிக்க காணி துண்டொன்றை பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றது.

இது விடயமாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களமும் புத்­த­சா­சன, மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மகரூப் எம்.பி. சபையில்  வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *