கொழும்பில் கோர விபத்து..! மகன் உயிரிழப்பு..! தந்தை படுகாயம்..!samugammedia

கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 36 வயதுடைய குடும்பஸ்தரும், அவருடன் பயணித்த 5 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிறுவன் உயிரிழந்தார்.

இந்நிலையில் காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *