முல்லைத்தீவின் புதிய அரச அதிபராக உமாமகேஸ்வரன் பதவியேற்பு! samugammedia

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரச அதிபராக திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் இன்று காலை தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பற்ற வரவேற்பு நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ஜகு, மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. லிங்கேஸ்வரன், உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகரும் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயபவாணி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *