வவுனியாவில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டிடம் திறந்து வைப்பு! samugammedia

வவுனியாவில் புதிதாக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட வர்த்தக சங்க கட்டடம் ஒன்று இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் அரச காணியொன்றில் உரிய அனுமதிகளை பெற்று இரண்டு மாடிகளை கொண்டு பல இலட்சம் ரூபா பெறுமதியில் வர்த்தகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் வவுனியா முதலாம் ஒழுங்கை கண்டி வீதியில் அமைக்கப்பட்டு இன்று பிற்பகல் 3 மணியளவில்  திறந்து வைக்கப்பட்டது.

வர்த்தக சங்க தலைவர் ச.சுஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாதுகாப்பு படைகளின் தளபதி வன்னி மேஜர் ஜெனரல் சீ.டீ.ரணசிங்க, சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணத்தின் பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, 56ஆவது காலால்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் காரியவசம், வவுனியா பிரதி பொலிஸ் பரிசோதகர் பி.அம்பாவில மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், பொலிஸார் , இராணுவத்தினர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *