யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் பெண்களுக்கான வலைப்பந்து சுற்றுப் போட்டி ஆரம்பம்! samugammedia

யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட உள்ளக கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றைய தினம்(08) காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் போட்டி ஆரம்பமானது.

குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் அபிதா வாகீசன் தலைமையில் நடைபெற்ற போட்டியில் பிரதம விருந்தினராக கொழும்பு கேற்வே கல்லூரியின் விளையாட்டு பிரிவுத் தலைவர் ஐயந்தி சோமசேகரம் டீ சில்வாவும் மேலும் சிறப்பு விருந்தினராக வடமாகாண உடற் கல்வி உதவிப் பணிப்பாளர் ஆர்.ராஜசீலனும் விருந்தினராக தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் தி.வாமதேவா, வடமாகாண வலைப்பந்தாட்ட முன்னாள் அணித் தலைவர் நளாயினி ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *