யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் மனைவி இறந்த சோகத்தில் கணவரான சிவஞானம் (70) தன் உயிரை மாய்த்துள்ளார்.
கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள அடைப்பந்தாழி வைரவர் கோயில் கிணற்றில் நேற்று குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
கிணறு வலையால் மூடப்பட்டு நீர் அள்ளுவதற்கு சிறிய துவாரமுள்ளது. அதன் ஊடாக அவர் கிணற்றுக்குள் குதித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அவரது மனைவி 24 நாட்களின் முன் காலமாகியிருந்தார்.
மனைவி உயிரிழந்த சோகத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாமென நம்பப்படுகிறது.

