வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு மரியாதை முன்னெடுப்பு!

மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றையதினம் காலை 6.30 மணியளவில் மன்னார் பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.பி.ஜெயதிலக்க தலைமையில் இடம்பெற்றது.

அதன்போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபால பரிசீலனைகளை மேற்கொண்டதோடு, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குறித்த நிகழ்வு பொலிஸ் அத்தியட்சகர் (1) எச்.எம்.சி.பி ஹேரத், உதவி பொலிஸ் அத்தியட்சகர் 2 விதானகே, மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *