கஞ்சாப் பொதியுடன்  சிக்கியவர் கைது

கஞ்சாப் பொதியுடன் 31 வயதான நபர் ஒருவரை ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

கிளிநொச்சி பளை பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து சுமார் 6 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , நீதிமன்றில் வழக்குத்  தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பளை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *