
காரைநகர் ஊர்காவற்துறை இடையில் சேவையில் ஈடுபடும் கடல் பாதையின் திருத்தப்பணிகள் காரணமாக சில வாரங்களாக அதன் சேவை இடம்பெறவில்லை.
இதனால் பொது மக்கள் ,அரச உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து உரிய அதிகாரிகள் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர், போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அங்கு நேரில் சென்று திருத்தப்பணிகளை பார்வையிட்டதுடன், திருத்தப்பணிகளை விரைவு படுத்துவதுடன் அதுவரை பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பது தொடர்பாகவும் பணிப்புரை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.




