நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய வழக்கு விசாரணைகள் தவணையிடப்பட்டன.
அதேவேளை சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்றையதினம் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





