மலேசிய நாட்டுக்கான உயர்ஸ்தானிகர்- கிழக்கு ஆளுனருக்கிடையில் சந்திப்பு..!samugammedia

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானை மலேசியா உயர்ஸ்தானிகர்  பட்லி ஹிஷாம் எடம், கொழும்பில் உள்ள மலேசியாவின் சான்சரி உயர்ஸ்தானிகராலயத்தின் தலைவர் திரு. அனூரின் இக்னேஷியஸ் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஆளுனரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மரியாதை நிமிர்த்தம்  சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து (10) கலந்துரையாடப்பட்டது.

பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் கூட்டு வளர்ச்சி குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இதில் ஆளுனரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க , மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண சுற்றுலா பணியக தலைவர் ஏ.பி.மதனவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *