அம்பாறை மற்றும் கல்முனை மக்களுக்கு நற்செய்தி

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் இப்றா லெப்பை முஹம்மது றிபாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கல்முனையில்  கடந்த வருடம் 9,154   டெங்கு நேயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். எனினும் இவ்வருடம் 1,368 பேர் மாத்திரமே இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் குறைவாகவே இனம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் டெங்கு களப்பணியில் ஈடுபடும் தற்காலிக உத்தியோகத்தர்கள் தம்மை நிரந்தரப்படுத்தக்கோரி மேற்கொண்டுள்ள பணிபகிஷ்கரிப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரதேச செயலகம் , பிரதேச சபை , பாடசாலைகள் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தற்காலிக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார், பொது சுகாதார பரிசேதகர்கள் இணைந்து டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தினை ஒன்றிணைந்த செயற்பாடாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் தற்காலிக டெங்கு கள உத்தியோகத்தர்களாக பணியாற்றுபவர்கள் தம்மை நிரந்தர நியமனம் செய்யகோரி 04 (நான்காவது நாளாகவும்) தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *