13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வானது இன்று(15) மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.
ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலையணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் தலைவர் கோசலை மதன் , கிழக்கு மாகாணசபையின் முன்னாள் செயளாளர் கந்தப்பு பத்மநாதன் , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.சார்பில் முன்னாள் வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா , அகில இலங்கை தமிழர் மகாசபைத் தலைவர் கலாநிதிகாசிலிங்கம் விக்னேஸ்வரன் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் கட்சியின் செயளாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் , தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன் , ஈழவர் விடுதலை முன்னணியின் செயளாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் மற்றும் ஈழநாயக்க மக்கள் விடுதலை முன்னணி.
சார்பில் முன்ளாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும் என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.