மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் சிரேஸ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.ஏ.எம்.றிஸ்மி மஜீட் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
கடந்த 15,16 ஆம் திகதிகளில் அனுராதபுர பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பங்கு பற்றிய இவர் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.