நல்லாட்சி அரசாங்க மலையக வீட்டு திட்டம் தாமதத்துக்கு தி.கா.வே காரணம் – வேலுகுமார் குற்றச்சாட்டு!samugammedia

நல்லாட்சி காலத்தில் கண்டி மாவட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் தாமதமானமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் பொறுப்புக்கூற வேண்டும். அது பற்றி அவரிடம்தான் கேட்டறிய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார் என தெரியவருகின்றது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்திய வீடமைப்பு திட்டம் மற்றும் அரச வீடமைப்பு திட்டம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், வேலுகுமார் எம்.பிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைத்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நல்லாட்சியின்போது கண்டி மாவட்டத்தில் கெலபொக்க, நூல்கந்துர ஆகிய பகுதிகளில் தான் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எஞ்சியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன, கட்டப்பட்ட வீடுகளும் முழுமைப்படுத்தப்படவில்லை, அந்த நடவடிக்கை கூட எமது அமைச்சின் கீழ் தான் முன்னெடுக்கப்பட்டுள்ளன என ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டதாக தெரியவருகின்றது.

இதனை  ஏற்றுக்கொண்ட வேலுகுமார், அது பற்றி முன்னாள் அமைச்சர் தான் (திகாம்பரம்) பொறுப்புகூற வேண்டும். அவரிடமும், (திகாம்பரம்), அப்போதைய பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் அது பற்றி கேளுங்கள் எனக் குறிப்பிட்டதாக கழுகு பார்வையாக செயற்படும் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *