புத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து! samugammedia

புத்தளத்தில் அன்மைக்காலமாக தொடர்ந்தும் தீப்பரவி வருகின்ற நிலையில் இன்றும் தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரணம் இதுவரையிலும் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் ஜோஷப்வாஸ் மாவத்த பகுதியில் இன்று பிற்பகல் அப்பகுதியில் திடீரென தீ பரவியது.

அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் நகரசபை அதிகாரிகளுக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து புத்தளம் நகரசபை தீயனைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன் போது சுமார் 3 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கரையாகியுள்ள நிலையில் தென்னை மரங்கள், தீக்கரையாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்டத்தில் அன்மைக்காலமாக இவ்வாறு தீச்சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறித்த தீப்பரவியமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டரியப்படவில்லையென்றும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *