
இலங்கையின் சட்ட யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ மொழிகளான சிங்களமும், தமிழும் மற்றும் இணை மொழியான ஆங்கிலமும் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திலிருந்தே கட்டாயமாக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் கொள்கைத் திட்டமிடல், மீளாய்வு, திட்ட அமுலாக்கல், மற்றும் மனிதவள அபிவிருத்திக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகமும் ஓமான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான ஓ.எல். அமீர் அஜ்வத் தெரிவித்தார்.