வவுனியா பொலிஸாரின் அதிரடி…! மூன்று இளைஞர்கள் கைது..!samugammedia

வவுனியா பிரதேச செயலகத்தில் கடந்த 16.07.2023 அன்று வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் வவுனியா பிரதேச செயலாளருடன் இணைந்து நடாத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான கலந்துரையாடலில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தயட்சகர்கள், தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , என பல உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் , கிராம சேவகர்கள், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் பொதுமக்களால் பல இடங்களில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டிருந்ததுடன் இதற்கு பொலிஸாரும் துணை போவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அதிரடியாக செயற்பட்ட வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் C.P விக்கிரமசிங்கே தலைமையிலான பொலிஸ் குழுவினர் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளுக்கு திடீர் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது தலா 5மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்களையும் , வவுனியா குடியிருப்பு-பூந்தோட்டம் பகுதியில் சிறுவியாபாரம் செய்யும் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 428கிராம் மாவா போதைப்பொருளை மீட்டதுடன் தன் உடமையில் வைத்திருந்த 84கிராம் மாவா போதைப்பொருளுடனும் 20 வயதுள்ள இளைஞரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *