பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்துக்கு எதிராக அம்பிகாவும் மனுதாக்கல் !

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 அல்லது 141 ஆகிய சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது மக்கள் வாக்கெடுப்பை மேற்கொள்ளாமல் இதை சட்டமாக இயற்ற முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பாக்கியசோதி சரவணமுத்தூவினாலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *