தீவகம் முழுவதையும் அதிகார சபைக்குள் கொண்டுவர புதிய சட்டமூலம் – மிக மோசமாகவுள்ள தமிழரின் தலைவிதி! samugammedia

சர்வதேசத்திற்கு தமிழ் மக்களிற்கு தீர்வு வழங்கப்போவதாக கூறி அரசியலமைப்பிலுள்ள 13 ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்க பேச்சுவார்த்தை நடாத்துவதானது ஈழத்தமிழர்களை  ரணில் விக்கிரமசிங்க கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்றது  என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம்  தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்தல் தொடர்பான  பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி செயலகத்திலிலுந்து மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடு்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திற்கு தமிழ்மக்களிற்கு தீர்வு வழங்கப்போவதாக கூறி அரசியலமைப்பிலுள்ள 13 ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்க பேச்சுவா்த்தை நடாத்துவதானது ஈழத்தமிழர்களை  ரணில் விக்கிரமசிங்க கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்றது.

இதை தெரிந்துகொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தமிழ்த் தரப்புகளின்  பேச்சுதலுக்கு வாய்ப்புக்ளை இல்லாமலாக்கி சிங்கள மக்கள் ஏற்றுகொள்ளாத ரணில் விக்கிரமசிங்கவிற்கு முண்டு கொடுப்பதாகவே அமைகின்றது.

13 ம் திருத்தத்தை அமுல்படுத்துவதாக கூறி மக்களை ஏமாற்றும்  அதே தருணம் இந்த அரசு தீவகம் முழுவதையும் அதிகார சபைக்குள் கொண்டுவந்து அனைத்து நிர்வாகத்தையும் கொழும்பின் கீழ் கொண்டு வருவதற்குரிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தீவகத்தின் அதிகார கட்டமைப்பானது மகாவலி அபிவிருத்தியை விட மிக மோசமாக தமிழரின் தலைவிதியை மாற்றியமைக்கக் கூடிய வகையில் கொழும்பால் மட்டும் நிர்வகிக்கக் கூடியவாறானதாக உத்தேச சட்டம் காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு முண்டுகொடுக்கும் தரப்பிற்கு இவ் விடயம் முற்றாக தெரிந்த விடயம்.  மக்களின் வாழ்க்கையை நடாத்த முடியாதவளவிற்கு மக்கள் அங்கிருந்து இடம்பெயரும் நிலையே உள்ளது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுற்றுலா போன்ற விடயங்களை காட்டி சிங்கள மயமாக்கலுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

தீவகம் இந்திய இலங்கைக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. எனவே அது பேரம்பேசுதல்களுக்காக சிங்களத் தரப்பிடம் இருக்க வேண்டுமென்பதற்காகவே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 

இந்திய ரோலர்கள் எமது கடற்தொழிலாளர்களின் சொத்துக்களை அழித்து தொழில் செய்வதற்கு அவமதித்தலைப் போலவே தீவக கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. 

சட்டபூர்வமாக ஒன்றுமில்லாத 13ம் திருத்தச்சட்டத்திற்குள்  பேச்சுவார்த்தையை முடக்கி அரசாங்கத்திற்கு வெள்ளையடித்து சிங்களமயமாக்கலுக்கு உதவுகின்றனர்.

வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் சுயநிர்ணயத்தை பாதிக்கும் எவ்வித அபிவிருத்திக்கும் அனுமதிக்கப்போவதில்லை.  அதற்கு துணைபோகும் தரப்பினர்களுக்கெதிராக மக்களை அணிதிரட்டுவோம்.

வடகிழக்கில் சமஷ்டிக்கான ஆணையைப் பெற்றவர்கள் 13 ம் திருத்தச் சட்டத்திற்குள் முடக்குவதற்கு செயற்படுகின்றார்கள்.  இத்துடன் மனோ கணேசன் 13 ம் திருத்தச்சட்டம் பற்றியும் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கூறிய கருத்தானது மலையக அரசியலை மையமாகக் கொண்டு செயற்படும் மனோ கணேசனேசனுக்கு வடகிழக்கு அரசியல் தன்மை புரியாமலுள்ள விதமே காரணமாகும். 

இத்துடன் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பை நினைவுபடுதுகின்றோம். 1983 ம் ஆண்டு இடம்பெயர்ந்து வடக்கிற்கு வந்த போது எமது உரிமைப் போராட்டத்தில் இணைந்து பயணித்தனர்.  அவர்களின் பங்களிப்பு போராட்டத்தில் உச்சமாக இருந்தது. 

இதேவேளை எமது கட்சியினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ராஜினியுடைய வீட்டினுள் புகுந்த பொலிசார் அவருக்கு அச்சுறுத்தும் விதமாகவும் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் விதமாகும் நடந்துள்ளனர்.  இது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வடகிழக்கிற்கு இடமாற்றத்தில் வரும் பொலிசார் பொரும்பாலும் தண்டணை முறை இடமாற்றத்தினூடாகவே பணிக்கமர்த்தப்படுகின்றனர். அவர்கள் நீதியின்பால் செயற்படாமல் மக்களின் காசை கெள்ளையடித்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கலாசாரத்ததையே தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். எனத் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *