சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறவேண்டும்- சரவணபவன் தெரிவிப்பு ! samugammedia

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறவேண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

இன்று மாலை 2.30மணியளவில் குறித்த ஆலயத்திற்கு நேரில் சென்று குறித்த விடயம் தொடர்பில் தர்மகர்த்தாசபையினருடன் நேரடியாக கலந்துரையாடி குறித்த அரச மரத்தை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார் .


இது குறித்து மேலும் தெரிவிக்கையில்

இராணுவத்தினரால் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அறிவித்து , பின்னர் நாங்கள் ஒருவரும் அசைய முடியாத நேரத்தில் , அவர்கள் இங்கே வருகை தந்து அளவுகள் எல்லாவற்றையும் எடுத்து , இதனைச் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது . 

மாசி மாதம் முதலாம் திகதி இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது , மாசி மாதம் நடந்த இந்த விடயம் எங்கள் யாருக்கும் தெரியாது , நிர்வாக சபைக்கு கூட தெரியாது , இப்பொழுது பார்த்தால் அவர்களுடைய நோக்கம் எவ்வளவு கூடுதலான பௌத்த அடையாளங்களை இந்த யாழ் மாவட்டத்திலோ , வட மாகாணத்திலோ ஏற்படுத்தி , ” இது பௌத்தர்கள் வாழ்ந்த இடம்தான் ” என்று இன்னுமொரு 10 , 15 வருடங்களில் அதை நிரூபிக்கக்கூடிய ஏற்பாட்டைத்தான் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் .

இதற்குத் துணையாக இராணுவம் , காவல்துறை , கடற்படை எல்லாப்படைகளும் ஒன்றாக சேர்ந்து நிக்கின்றன . அவர்கள் எல்லோரும் சிங்களவர்கள் தான் , 99 % சிங்களவர்கள் இருக்கின்றதால் அவர்களை மீறி தமிழர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றனர் .எனவே இவர்களால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தகமானி மீளப் பெறப்பட வேண்டும் .

கோவில் நிர்வாகத்துடன் எந்தவித பேச்சுக்களையும் அவர்கள் பேசவில்லை , இது கோவில் நிர்வாகம் , ஒரு தனியார் கோவில் அதற்கான உறுதி , தோம்பு , நீதிமன்ற கட்டளை எல்லாம் இருக்கின்றது . அவற்றை வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்த படி வர்த்தமானியில் பிரசுரித்திருக்கின்றார்கள் . எனவே அவர்களுடைய இந்த பௌத்தமயமாக்கல் தீய நோக்கங்கள் , அதாவது இலங்கை படையைச் சேர்ந்தவர்களிடமிருந்து எந்த பொதுமக்களும் விலகித்தான் நிற்போம் , நாங்கள் ஒருகாலத்தில் வல்லமையுடன் தான் இருந்தோம் , ஆனால் இப்பொழுது பலம் குன்றி இருக்கின்றோம் 

இந்த நிலையில் அவர்கள் எங்கள் மேல் ஏறி சவாரி செய்ய நினைக்கின்றார்கள் ! நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து எதிர்ப்புகளை காட்ட வேண்டும் , இல்லா விட்டால் இந்த இனம் அழிவதற்குரிய ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கின்றார்கள் , இதுவும் ஒரு வகையில் இன அழிப்புத்தான் , எங்களுடைய கலாச்சாரம் , சமயத்தில் அவர்கள் கை வைத்திருக்கின்றார்கள் ! இதுவும் ஒரு இன அழிப்புத்தான் எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சகல தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் , இவற்றை எதிர்க்க வேண்டும் , இவற்றை எல்லாம் நாங்கள் நிரூபித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இப்போது தையிட்டியில் கட்டிவிட்டார்கள் யாருக்கும் தெரியாமலே ஒரு பெரிய கோபுரத்தைக் கட்டி விட்டார்கள் , அப்புறப்படுத்தக் கோரினாலும் அது நடக்கக்கூடிய காரியமாக எனக்கு தெரியவில்லை இருந்தாலும்  இங்கே அரசாங்க உத்தியோகத்தர்கள் , தொல்லியல் திணைக்களத்தினர் , ஜனாதிபதி அவர்கள் இந்த வேலைகளை செய்ய வேண்டாம் என்று சொன்ன பிற்பாடும் தொடர்ச்சியாக அவர்கள் இதை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள் .

தற்பொழுது எங்களுடைய பலம் குன்றிய நிலையில் போராட்டத்தை தவிர எங்களுடைய பலத்தைக் காட்டிட முடியாமல் இறுக்கின்றது , போராட்டங்களை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் அதில் என்ன இருக்கின்றது என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் ஆனால் அவர்கள் இப்பொழுது மறைமுகமாக சேர்ந்து ஓடுங்கள் சேர்ந்து ஓடுங்கள் என்கிறார்கள் , இந்தக் கோவில் தனியார் , கோவில் இந்தக்கோவிலில் இந்த மரம் , இந்தக்கோவில் வந்த பின்னர் தான் வந்தது என்பதை நிரூபிக்க கோவில் நிர்வாகத்திடம் சான்றுகள் உள்ளன . அரசாங்கம் இதனை கவனத்தில் எடுத்து உடனடியாக இந்த வர்த்தக மானியை வாப்பஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *