
முஸ்லிம்கள் தமது வீடுகளிலேயே மரணிக்கும் ஜனாஸாக்களை உரிய நேரத்தினுள் அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தேவையான ஆவணங்களை தயார் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக அகில இலங்கை மஸ்ஜித்கள் சம்மேளனம் அண்மையில் பிரதமரும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சு நடத்தியது.