21 வருடத்திற்கு பின் வரும் குருவின் வக்ர பார்வை : மூன்று ராசிகளுக்கு அதிஷ்டம்

ஜோதிடத்தில் ஒரு கிரகம் அல்லது ஒரு நட்சத்திரம் அதன் நிலையை மாற்றினால், இவை 12 ராசிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால் தான் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இதில் இடமாற்றம் மட்டுமின்றி, கிரகங்களின் உதயம், அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இவற்றினை அதிகமாகவே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

குரு பகவான்
குரு பகவான் ஜோதிடத்தில் மங்களகரமான கிரகமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் சுப கிரகமான இவர், மகிழ்ச்சி, செல்வம் இவற்றிற்கு காரணியாகவும் இருக்கின்றார். ஆதலால் குருவின் பார்வை ஒரு ராசியில் பட்டால் அவர் அனைத்து சந்தோஷத்தையும் அடைவார்.

தற்போது மேஷ ராசியில் அமர்ந்திருக்கும் குரு பகவான் செப்டம்பர் மாதத்தில் வக்ர பெயர்ச்சி அடைகின்றார். இந்த வக்ர நிலையில் மீன ராசிக்கு நுழைகின்றார்.

21 ஆண்டுகளுக்கு பின்பு செப்டம்பர் 4ம் தேதி காலை 9.15 மணிக்கு குரு வக்ர பெயர்ச்சி அடைகின்றார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தினை பெறுவார்கள். அந்த ராசியைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

 

கடக ராசி

கடக ராசியினர் இந்த குருவின் வக்ர பெயர்ச்சியால் அதிக நன்மைகளை பெருவதுடன், கடக ராசியின் 6 மற்றும் 9ம் வீட்டில் அதிபதியாக வியாழன் இருக்கின்றார்.

எனவே இந்த காலக்கட்டத்தில் நல்ல முன்னேற்றமும், அனைத்து பணியிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதுடன், உத்தியோகத்திலும் முன்னேற்றம் காணப்படும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

 

சிம்ம ராசி

சீறி வரும் சிம்ம ராசிக்கு குருவின் வக்ர பெயர்ச்சியானது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதுடன், ஐந்து மற்றும் எட்டாம் வீட்டில் அதிபதியாகவும் உள்ளார். இதனால் வாழ்வில் மகிழ்ச்சியும், தடைபட்ட வேலையில் வெற்றியையும் காணமுடியும். வருமானமும் உயரும்.

தனுசு ராசி

தனுஷ் ராசியினருக்கு சிறப்பான பழனை தருவதுடன், இந்த ராசியின் ஐந்தாம் இடத்தில் குரு வக்ரமாவதால், வாழ்க்கையில் சாதகமான முடிவுகளை காண்பதுடன், வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசி அதிபதி குரு பகவான் என்பதால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அனைத்து பணிகளும் எளிதாக நடக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *