சர்ச்சையில் சிக்கிய நாமல் – திருமணம் தொடர்பில் வௌிச்சத்துக்கு வந்த உண்மை..! samugammedia

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார விநியோகம் தொடர்பான நிலுவைத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளீன் ஹேவகே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மின்சார சபை இவ்வாறு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீரகெட்டிய இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக மின் உற்பத்திக்கான இயந்திரங்களை வழங்குவதற்காக 26 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் 26 லட்சம் ரூபாய் நிலுவை மின்சாரக் கட்டணத்தை செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தமக்கோ அல்லது தனது தந்தைக்கோ இதுவரை அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திருமண விழாவுக்கான அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் தகவல் கேட்கவுள்ளதாக நாமல் மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *