”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

”இதன் போது சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *